முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவங்களை நிர்வாகிகளிடம் தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      தேனி
Image Unavailable

தேனி - பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் நேற்று நடைபெற்ற அதிமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும்  பழைய உறுப்பினர்கள் அட்டை புதுப்பித்தலுக்கான படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.பி சையதுகான் தலைமை தாங்கினார். கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே. ஜக்கையன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பழைய உறுப்பினர்கள் அட்டை புதுப்பித்தலுக்கான படிவங்களை நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களிடம் வழங்கி ஆலோசனைகள் வழங்கினார். அவர் பேசும்போது கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1972ம் ஆண்டு தொண்டர்கள் இயக்கமாக நமது கழகத்தை துவக்கினார். அதன் பின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் அபிமானம் மற்றும் பெரும் ஆதரவுடன்  மூன்று முறை தமிழக முதல்வராக பதவியேற்றார். சோதனை வந்தபொழுதெல்லாம் புதிய எழுச்சியை ஏற்படுத்தி மகத்தான வெற்றியை பெற்றார். அவருடைய மறைவுக்கு பின் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் நமது இயக்கத்தை வேரோடு அழித்து விடலாம் என எண்ணினர். அப்பொழுது நமது இயக்கத்தின் பொதுச்செயலாளராக பதிவியேற்ற புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல நெருக்கடிகள், சோதனைகளை முறியடித்து 17 லட்சம் தொண்டர்களாக இருந்த அதிமுகவை ஒன்றரை கோடி உறுப்பினர்கள் கொண்ட இயக்கமாக எஃகு கோட்டையாக மாற்றினார். தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்களுக்கு தேவையான பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி மக்களின் பேராதரவுடன் 17 ஆண்டுகள் தமிழக முதல்வராக பதவி வகித்தார். அதே போல் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்று இந்தியாவில் 3வது பெரிய கட்சியாக உருவாக்கினார்.
               கூட்டுறவு சங்கங்களை பொறுத்தவரையில் 22 ஆண்டுகள் திமுகவின் இரும்பு பிடியில் இருந்ததை உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் 98 சதவிகித இடங்களில் நமது கழகத்தினர் 2 லட்சம் பேர் பதவியேற்றனர். புரட்சித்தலைவி அம்மா இல்லாத இந்த நேரத்தில் எத்தகைய சூழல் ஏற்பட்டாலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய லட்சிய பாதையில் சென்று சிறப்பாக கழகத்தை வழிநடத்திட வேண்டும் என்ற நோக்கில் ஒன்றிணைந்து தொண்டர்கள் நிறைந்த  இருக்கும் நமது இயக்கத்தை தான் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. தற்போது கழக அமைப்பு தேர்தல் நடந்து நான்கரை ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் அமைப்பு தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த முறை நமது தேனி மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கு 90 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது அதை விட அதிகமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்ட  உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இதுவரை நமது தலைமை நிலையத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1 கோடியே 25 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட இருக்கிறார்கள் என்றார். புரட்சித்தலைவி அம்மா இல்லாத இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முத்திரையை பதிக்க வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார், முன்னாள் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஒ.பி.ரவீந்திரநாத்குமார், மாவட்ட இணை செயலாளர் முறுக்கோடை ராமர், நகர செயலாளர்கள் பெரியகுளம் என்.வி.ராதா, தேனி முருகேசன், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், தேனி ஆர்.டி.கணேசன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து