முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட்கோலிக்கு நல்ல வழிகாட்டி தேவை தென் ஆப்பிரிக்க முன்னாள் பயிற்சியாளர் ரே

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

செஞ்சூரியன் : உலகின் சிறந்த வீரராகும் திறமைகளை கொண்ட விராட் கோலி சிறந்த கேப்டனாவதற்கு நல்ல வழிகாட்டி தேவை என தென்னாப்பிரிக்க முன்னாள் பயிற்சியாளர் ரே கூறியுள்ளார்.

இந்தியா முன்னிலை...

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்று பயணம் செய்து 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.  இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2008ல் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது.  அப்பொழுது தென்னாப்பிரிக்க ஜூனியர் அணியின் பயிற்சியாளராக இருந்தவர் ரே ஜென்னிங்ஸ்.  ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பயிற்சியாளராகவும் அவர் இருந்துள்ளார்.

சிறப்பாக செயல்படவில்லை...

இந்த நிலையில் ரே ஜென்னிங்ஸ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டோனியில் இருந்து கோலியின் தலைமைக்கு இந்திய அணி சென்றுள்ளது கடுமையான மாற்றம். டோனி மிக அமைதியானவர்.  கோலி அதற்கு முற்றிலும் எதிரானவர். ஒரு கேப்டனாக கோலி இன்னும் சிறப்புடன் செயல்படவில்லை என நான் நினைக்கிறேன்.  உடை மாற்றும் அறையில் மிரட்டலுடன் அவர் செயல்பட கூடும்.  அவரது சக வீரர்கள் கோலியை கண்டு உண்மையில் கோலி யார் என ஆச்சரியம் அடைய கூடும் என கூறியுள்ளார்.  இளம் வீரர்களிடையே கோலி பயத்தினை புகுத்த கூடியவர் என ரே கருதுகிறார்.

நல்ல வழிகாட்டி தேவை...

முன்னேற்றத்திற்கான வழி மற்றும் சிறந்த கேப்டனாக வருவதற்கான உந்துதலை ஏற்படுத்த கூடிய ஒரு நல்ல வழிகாட்டி கோலிக்கு கிடைக்க வேண்டும்.  அப்படி கிடைத்து விட்டால் அது சிறப்புடன் இருக்கும் என்றும் ரே கூறுகிறார். உலகின் சிறந்த வீரராகும் திறமை அவரிடம் உள்ளது.  அதற்கு, அவருக்கு நல்ல வழிகாட்டியாக சில உதவியாளர்கள் தேவை என கூறியுள்ள ரே, வயது முதிர்ச்சி அடையும்பொழுது, கோலி பெருமளவில் அமைதியாவார் என்றும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து