முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் : கலெக்டர் லட்சுமி பிரியா தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      அரியலூர்
Image Unavailable

 

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கூட்டம் மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, தலைமையில் நேற்று (08.02.2018) நடைபெற்றது.

குறைதீர் கூட்டம்

இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் பேசியதாவது :- தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று (08.02.2018) அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பங்கேற்புடன் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகள் தீர்க்கும் விதமாக இக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், 225 கோரிக்கை மனுக்களை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்டு, அம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, துண்டு பிரசுரங்கள் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று, தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களை பெற்று பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, பேசினார். பாரா விளையாட்டு பின்னர், பாரா விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற பாரா விளையாட்டு போட்டிகளில் குண்டு எறிதல், தட்டு எறிதல் ஆகிய போட்டிகளில் முற்றிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் வென்று, உலக அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தேர்வாகி, ஜப்பான், துளாசியா, சீனா ஆகிய நாடுகளில் நடைபெறும் ஆசியக்கோப்பை பாரா விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.சிவகாமி என்ற மாற்றுத்திறனாளியை மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, சான்றிதழ் வழங்கி, வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

பின்னர், மாநில அளவில் நடைபெற்ற பாரா விளையாட்டு போட்டிகளில் ஈட்டி எறிதல், குண்டு எறிதல் ஆகிய பிரிவுகளில் வெற்றிபெற்று வெள்ளி பதக்கம் பெற்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.ராஜாகுமாரி என்ற மாற்றுத்திறனாளியையும், 100 மீ ஓட்டம், 200 மீ ஓட்டம், தொடர் ஓட்டம் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்று வெள்ளி பதக்கம் பெற்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.தமிழ்வேல் என்ற மாற்றுத்திறனாளியையும் மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, பாராட்டி, சான்றிதழ்களை வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி, துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) ஜெ.பாலாஜி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் ஜெ.ஜெயராணி, மாவட்ட சமூக நல அலுவலர் ப.பூங்குழலி மற்றும் மாற்றுத்திறனாளிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து