முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழிவறைகள் கட்டிதராவிட்டால் குஜராத்தை விட்டு வெளியேறுவோம்: போர்க்கொடி தூக்கும் கிராம மக்கள்!

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

அகமதாபாத்,  எங்களுக்கு கழிவறைகள் கட்டித்தராவிட்டால் எங்கள் கிராமத்தை தத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்துடன் இணைத்துவிடுங்கள் என போர்க்கொடி தூக்கியுள்ளனர் குஜராத் கிராம மக்கள்.
தெற்கு குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் கப்ரடா வட்டாரத்தில் உள்ளது மேக்வாட் கிராமம். திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத இடங்களில் இதுவும் ஒன்று என குஜராத் அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கிராமம் இது. இங்கு 2,160 பேர் வசிக்கின்றனர். குஜராத் அரசு அறிவித்ததைப் போல் இங்கு எந்த ஒரு கழிப்பறையும் இல்லை. கழிவறை கட்டித்தாருங்கள் என இன்னமும் இந்த மக்கள் போராடி வருகின்றனர்.

ஆனால் குஜராத் மாநில அரசு இதனை கண்டுகொள்ளவே இல்லை. எத்தனையோ முறை போராடியும் கழிவறைகளை கட்டித்தராததால் இந்த கிராம மக்கள் தங்களை அருகே உள்ள தத்ரா நாகர் ஹைவேலி யூனியன் பிரதேசத்துடன் இணைத்துவிடுங்கள்; குஜராத்தை விட்டு நாங்கள் வெளியேறிவிடுகிறோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.  குஜராத்தின் ஏதோ ஒரு குக்கிராமத்தின் கதை மட்டும் இது அல்ல.. தலைநகர் அகமதாபாத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள குஹா என்ற கிராமத்தின் நிலையும் இதுதான்... இந்த கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டப்பட்டுவிட்டது என்கிறது அரசின் அறிக்கை. வளர்ச்சி என்பது பிரசாரம் தற்போது இந்த கிராமத்தில் தன்னார்வலர்கள் மூலம் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.  கழிப்பறைகள் கட்டப்பட்ட மாநிலம் என பாஜக செய்த பிரசாரம் பொய்யானது என்பது ஒவ்வொன்றாக அம்பலப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து