ராமேசுவரம் திருக்கோயிலில் தங்கப்பல்லாக்கில் சுவாமி,அம்மன் வீதி உலா.

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
rmsswamy 12 2 18

 ராமேசுவரம்,- ராமேசுவரம் திருக்கோயிலில் மாசித்திருவிழாவின் ஏழாம் நாளான திங்கள் கிழமை சுவாமி,அம்மன் மலர் அலங்காரத்துடன் தங்கப் பல்லாக்கில் முத்தங்கி சேவை கோளத்தில் நான்கு ரத வீதியில் உலா  வந்து  பக்தர்களுக்கு நேற்று காட்சியளித்தனர்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில்  மாசித்திருவிழா பிப்ரவரி 6 ஆம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதையடுத்து  ஏழாம் நாள்  திருவிழாவை முன்னி்ட்டு திங்கள் கிழமை காலையில் திருக்கோயிலில் சிறப்பூஜைகள் நடைபெற்றன.பின்னர் கோயிலிருந்து  ராமநாதசுவாமி,பிரியாவிடை மற்றும் பர்வதவர்த்தின் அம்மன் மலர் அலங்காரத்துடன் தங்கப்பல்லக்கில் முத்தங்கி சேவை கோலத்தில் எழுந்தருளி்  நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து  அருள்பாலித்தனர். வீதிகளில் சுவாமி,அம்மனை பக்தர்கள் வழிபாட்டு அருள் பெற்றனர்.  வீதி உலாவில் கண்காணிப்பாளர்கள்   ககாரீன்ராஜ், பேஷ்கார் கண்ணன்,கலைச்செல்வம்,செல்லம்,இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன் உள்பட கோயில் அலுவலர்களும்.பணியாளர்களும்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து