கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      தேனி
opsnews 12 2 18

 தேனி -தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், தேனி என்.ஆர்.டி மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம்,  தலைமையில்   நடைபெற்ற கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, 1400 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர் வரிசைகளுக்கான பொருட்களை வழங்கினார்.
      முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசால், பெண்கள் கருவுற்ற காலங்களில் ஏற்படுகின்ற வருவாய் இழப்பினை ஈடு செய்திடும் பொருட்டும், கருவுற்ற காலங்களில் கர்ப்பிணித்தாய்மார்கள் நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதனைக் கருத்தில் கொண்டும், கர்ப்பிணித்தாய்மார்கள் மகிழ்ச்சியடைவதன் மூலம் கருவில் இருக்கும் சிசுவின் ஆரோக்கியம் மேம்படும் என்ற நோக்கிலும், தாய் சேய் நலனை மேம்படுத்திடும் வகையிலும், சமுதாய வளைகாப்பு என்னும் சமுதாய விழிப்புணர்வு விழா பாரம்பரிய முறையில் கொண்டாடப்படுகிறது.
   அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 240 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 120 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 160 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 160 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 120 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட 200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 120 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், தேனி நகராட்சிக்குட்பட்ட 160 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 120 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் என மொத்தம் 1400 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர் வரிசைகள் மற்றும் 5 வகை கலவை சாதங்கள் (சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம்) வழங்கப்பட்டது.
  தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் உலக தரச்சான்றிதழ் (ஐளுழு)  பெற்ற 4 அங்கன்வாடி மையங்களான கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலந்தளிர் அங்கன்வாடி மையம், தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிந்தநகரம் அங்கன்வாடி மையம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வலையப்பட்டி அங்கன்வாடி மையம், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிந்தலைச்சேரி அங்கன்வாடி மையங்களுக்கான சான்றிதழ்களையும், தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 1,065 அங்கன்வாடி மையங்களுக்கு தலா ரூ.500 மதிப்புள்ள கொசு வலைகளையும், அங்கன்வாடி பயிலுகின்ற 20,001 குழந்தைகளுக்கு ரூ.56.35 இலட்சம் மதிப்பீட்டில் தலா 2 வண்ண சீருடைகளை  தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.
  இவ்விழாவில், தேனி பாராளுமன்ற உறுப்பினர் இரா.பார்த்திபன் அவர்கள், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் அவர்கள், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் தி ராஜராஜேஸ்வரி அவர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல் அவர்கள், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) தி கிருஷ்ணவேனி அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து