உலக முதலீட்டாளர்கள் மாநாடு: 2019 ஜன.23, 24-ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் - தமிழக அரசு அறிவிப்பு

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      தமிழகம்
Tn-Govt-Top(C)

சென்னை : 2019-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி மற்றும் 24-ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

2015-ம் ஆண்டு...

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-

தமிழ்நாட்டில் நிலவும் அமைதியான சட்ட ஒழுங்கு சூழ்நிலை, தடையற்ற மின்சாரம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வலுவான கட்டமைப்பு, பல சர்வதேச விமான நிலையங்கள், பன்முக துறைமுகங்கள் மற்றும் திறன் மிக்க மனித ஆற்றல் ஆகியவை தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு

முக்கிய காரணிகளாக விளங்கி வருகின்றன. இவை உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு முதலீட்டாளர்களை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் இந்தியா மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த 8000க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

98 ஒப்பந்தங்கள்...

பல நாடுகள் பங்கேற்ற இம்மாநாட்டில், 9 நாடுகள் பங்குதாரர் நாடுகளாகப் பங்கேற்று, ரூ.2.42 லட்சம் கோடி மதிப்பிலான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதில் இதுவரை, ரூ.62,738 கோடி மதிப்பிலான 1 நிறுவனங்களின் முதலீடுகள் பல்வேறு கட்டங்களில் செயலாக்கத்தில் உள்ளன. தன் மூலம், 96,341 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. முதல் மாநாட்டிற்கு கிடைத்த நல்ல வரவேற்பினைத் தொடர்ந்து தற்போது, இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை அரசு சென்னையில் அடுத்த ஆண்டு ( 2019 ) ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் நடத்த உள்ளது.

ரூ.75 கோடி ஒதுக்கீடு

இம்மாநாட்டை நடத்த முதல்வர் ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இம்மாநாட்டை சிறப்பாக நடத்தி தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து கொண்டு செல்ல அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள், தொழில் கூட்டமைப்புகள், வெளிநாட்டு தொழில் கூட்டமைப்புகள், தூதரகங்கள், அனைவரும் ஒத்துழைப்பைதரவேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jallikattu 2019 | Alanganallur

Viswasam Review | Ajith | Nayanthara | Viswasam Movie review

PETTA MOVIE REVIEW | Petta Review | Rajinikanth | Vijay Sethupathi | Karthik Subbaraj | Anirudh

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5

Power of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து