முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டத்தில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கண்காணிப்புக்குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      அரியலூர்
Image Unavailable

அரியலூர் மாவட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கண்காணிப்புக்குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா,   தலைiமையில் இன்று (15.02.2018) டைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்  தெரிவித்ததாவது :

கண்காணிப்புக்குழுக் கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் மார்ச் 2018-ல் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு 02.02.2018 முதல் 13.02.2018 வரை நடைபெற்றது. மேலும், கருத்தியல் தேர்வு 01.03.2018 முதல் 06.04.2018 வரை நடைபெறவுள்ளது.இத்தேர்வுகள் 72 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 3851 மாணவர்களும், 4559 மாணவியர்களும் என 8410 மாணவ, மாணவியர்கள் 30 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். 30 மையங்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 70 பறக்கும் படையினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு 16.02.2018 முதல் 24.02.2018 வரை நடைறவுள்ளது. மேலும், கருத்தியல் தேர்வு 07.03.2018 முதல் 16.04.2018 வரை நடைபெறவுள்ளது.இத்தேர்வுகள் 76 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 3803 மாணவர்களும், 4836 மாணவியர்களும் என 8639 மாணவ, மாணவியர்கள் 30 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். 30 மையங்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 70 பறக்கும் படையினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறைத்தேர்வு 20.02.2018 முதல் 28.02.2018 வரை நடைபெறவுள்ளது. மேலும், கருத்தியல் தேர்வு 16.03.2018 முதல் 20.04.2018 வரை நடைபெறவுள்ளது.இத்தேர்வுகள் 165 உயர்ஃமேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 5313 மாணவர்களும், 5798 மாணவியர்களும் என 11,111 மாணவ, மாணவியர்கள் 43 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். 43 மையங்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 86 பறக்கும் படையினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கட்டுகள் கொண்டு செல்வதற்கும், தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் கட்டுகளை விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு எடுத்து வருவதற்கும் அரியலூர் கல்வி மாவட்டத்திற்கு 3 வழித்தட அலுவலர்களும், உடையார்பாளைம் கல்வி மாவட்டத்திற்கு 6 வழித்தட அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு,   ஆயுதம் தாங்கிய காவலர்களின் பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்வார்கள்.10ம் வகுப்பு தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கட்டுகள் கொண்டு செல்வதற்கும், தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் கட்டுகளை விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு எடுத்து வருவதற்கும் அரியலூர் கல்வி மாவட்டத்திற்கு 4 வழித்தட அலுவலர்களும், உடையார்பாளைம் கல்வி மாவட்டத்திற்கு 6 வழித்தட அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு,   ஆயுதம் தாங்கிய காவலர்களின் பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்வார்கள்.மேலும், தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர்களுக்கும், மாணவ, மாணவியர்கள் குறித்த நேரத்தில் பொதுத்தேர்வு எழுத ஏதுவாக போதிய பேருந்து வசதி செய்திட வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசுப்பேருந்து கும்கோணம் கோட்டம் அரியலூர், ஜெயங்கொண்டம் கிளை மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பின்னர், தேர்வுகள் அமைதியாகவும், மந்தனத்தன்மையுடனும் நடைபெற ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு ஆயுதம் தாங்கிய காவலர் உட்பட, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர்கள் மேற்கொள்வார்கள்.இத்தேர்வுகளை நேர்மையாகவும், முறைகேடுகளுக்கு இடமளிக்காமலும் நடத்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா,   தெரிவித்தார்கள்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், அரியலூர் கோட்டாட்சியர் மு.மோகனராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அனந்தநாராயணன், துணைக் காவல் கண்காணிப்பாளர்; மோகன்தாஸ், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முதல்வர் மொழியரசி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் செயற்பொறியாளர் (தமிழ்நாடு மின்சார வாரியம்), அரியலூர், ஜெயங்கொண்டம் கிளை மேலாளர்கள் (அரசுப்போக்குவரத்து கழகம்) மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து