முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தர் உடற்பயிற்சி கூடம் சார்பில் இரத்ததான முகாம்,உடல் உறுப்பு தானம் பதிவு விழிப்புணர்வு முகாம்

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      திருவள்ளூர்
Image Unavailable

திருவள்ளுர் அடுத்த மணவாளநகரில் புத்தர் உடற்பயிற்சி கூடம் சார்பில் காதலர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்,உடல் உறுப்பு தானம் பதிவு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

உடல் உறுப்பு தனாம்

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவ மருத்துமனையில் இருந்து நடமாடும் பேருந்தில் பொது மருத்துவர் கனிமொழி தலைமையில் இரத்தம் இளைஞர்கள்,பொது மக்களிடம் இருந்து இரத்தம் சேகரிக்கப்பட்டது.உடல் உறுப்பு தானம் பதிவு ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா,கோகுல் ஆகியோர் உடல் உறுப்பு தானம் பதிவு செய்தனர்.முகாம் புத்தர் உடற்பயிற்சி கூடத்தின் நிறுவனர் முன்னாள் தமழ்நாடு ஆணழகன் து.சீனிவாசன் என்கிற துரை.அம்பேத்கர்வாசன் தலைமையில் நடைபெற்றது.உடற்பயிற்சி கூட மாணவர் பிரவீன்குமார் வரவேற்றார்.

தமிழ்நாடு ஆணழகர்கள் ரவி,யுரேந்திரன்,சதீஷ்குமார்,ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அறம் திரைப்படத்தின் இயக்குனர் கோபி நயினார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தார்.முகாமில் வி.சி.க மாவட்ட செயலாளர் சித்தார்த்தன்,கவிஞர் நீலவானத்து நிலவன்,கைவண்டூர் செந்தில்,சண்முகம்,குங்ஃபு மாஸ்டர்கள் படப்பை மதன்,வல்லக்கோட்டை மதன்,குத்துச்சண்டை பயிற்சியாளர் செங்கல்பட்டு குலாம்,வழக்கறிஞர் அருணகிரி மற்றும் பலர் கலந்து கொண்டு உடல் உறுப்பு தானம் பதிவு செய்த,இரத்த தானம் வழங்கியவர்களை வாழ்த்தி பேசினார்கள்.முகாமில் இளைஞர்கள்,பொதுமக்கள் உட்பட பலர் இரத்த தானம்,உடல் உறுப்பு தானம் பதிவு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து