முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்திற்கு சாலைகள் பாதுகாப்பிற்கு ரூ.2.85 கோடியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே தகவல்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      சேலம்
Image Unavailable

 

சேலம் நேரு கலையரங்கத்தில் ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் இலவச மருத்துவ முகாமினை நேற்று (20.02.2018) கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தொடங்கி வைத்தார். இது குறித்து கலெக்டர் தெரிவித்ததாவது

நிதி ஒதுக்கீடு

தமிழ்நாடு முதலமைச்சர் சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பிற்கு ரூ.2.85 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சேலம் மாவட்டத்தில் அரசு வானக ஓட்டுனர்கள், கல்வி நிறுவன ஓட்டுனர்கள் 3,673 மற்றும் 5000 சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு இன்றைய தினம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் மற்றும் உடல்நலத்தை பேனிகாக்கும் வகையில் இலவச மருத்து பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் சென்ற ஆண்டு ஜனவரி 2017 வரை 73 விபத்து உயிரிழப்புகள் ஏற்பட்டது. நடப்பாண்டில் ஜனவரி 2018 வரை 35 விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளது. அரசு மேற்கொண்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விபத்து உயிரிழப்பு எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.

 

விதிகள்

வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்பான வேகத்தில் செல்லுதல், திரும்பும் முன் சிக்னல் செய்தல், இரவு நேரங்களில் எதிரில் வானம் வரும் போது ஒளியளவை குறைத்தல், ஆல் இல்லா லெவல் கிராஸ்சில் நின்று பார்த்து செல்லுதல், சாலை சந்திப்பில் வேகத்தை குறைத்தல் முன் செல்லும் வாகனத்தில் இருந்து இடைவெளி விட்டு செல்லுதல், சிக்னல் பெற்ற பிறகு முந்துதல், மருத்துவமனை மற்றும் பள்ளி உள்ள இடங்களில் கவனமாக செல்லுதல், சிக்னல் விளக்குகளை மதித்து ஓட்டுதல், போக்குவரத்து காவலர்கள் சிக்னல்களை கட்டுப்பட்டு நடத்தல், மருத்துவமனை உள்ள இடங்களில் ஒலி எழுப்பாமல் செல்லுதல், நோயலி ஊர்தி, தீயனைப்பு ஊர்திகளுக்கு வழிவிடுதல் உள்ளிட்ட போக்குவரத்து நடைமுறை விதிகளை பின்பற்றி வாகன ஓட்டுனர்கள் கவனமாக வாகனத்தை ஓட்டி விபத்து இல்லாமல் பயணிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் காவல்த்துறை உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், வட்டாடப்போக்குவரத்து அலுவலர் (மேற்கு) த.தாமோதரன், வட்டாடப்போக்குவரத்து ஆய்வாளர் (மேற்கு) ஆர்.வெங்கடேசன், கல்வி நிறுவன வாகன ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து