முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்.-விருதுநகர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம்   மாவட்ட ஆட்சித்தலைவர்  .சிவஞானம்,  முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத்தலைவர்,விருதுநகர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்  டி.ராதாகிருஷ்ணன்   தலைமையில்   பால்வளத்துறை  அமைச்சர்  .கே.டி.ராஜேந்திரபாலாஜி  மத்திய மாநில அரசுகளின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதிகள் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து துறை வாரியாக  ஆய்வு மேற்கொண்டார்கள்
விருதநகர் மாவட்டத்தில், 2017 -18-ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களான அனைவருக்கும் வீடுகள் திட்டம் கிராமின், பிரதான மந்திரி கிராம பதக் யோஜனா, தூய்மை பாரத இயக்கம், அனைவருக்கும் கல்வி திட்டம், தேசிய நெடுஞ்சாலை , பிரதான மந்திரி பசல் பீமா யோஜனா, தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , அம்ரூட் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும் குடிசை மாற்று வாரியம் உட்பட பல்வேறு திட்டங்களின் செயல்படுத்தப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள  பணிகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேற்கொள்ளப்படவுள்ள பணிகளை விரைவாகவும், துரிதமாகவும் முடித்திட  சம்மந்தப்பட்ட அரசுஅலுவலர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டது.
மேலும் அலுவலர்களின் ஒட்டுமொத்த அறிக்கைகளான ஒருங்கிணைந்த நீர்வடிபகுதி மேலாண்மை திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டங்கள் நிதி மானியம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் குறை நிறைகள் குறித்து தெளிவாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், திருவில்லிப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர்  மு.சந்திரபிரபா, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை)  பெ.திலகவதி, திட்ட இயக்குநர் (ஊரக வாழ்வாதார இயக்கம்)  .தெய்வேந்திரன், மாவட்ட அச்சகத்தலைவர்  சித்திக்,  மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு,கண்காணிப்புக் குழு உறுப்பினர்  .கதிரவன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து