முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நீர் விவகாரம்: கேரளா மறு ஆய்வு மனு தாக்கல்

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, காவிரி நீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அண்மையில் அளித்த தீர்ப்பில் மாற்றம் செய்யக் கோரி கேரள அரசு மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

கடந்த பிப்ரவரி 16-ம் தேதி சுப்ரீம் கோர்ட் அளித்த காவிரி இறுதித் தீர்ப்பில், காவிரிப் படுகையில் அல்லாத புனல் மின் திட்டங்களுக்கு நீர் வழங்க வேண்டும் என்ற கேரளத்தின் நிலைப்பாட்டை நடுவர் மன்றம் மறுத்தது சரியே. கேரளத்தின் மொத்த தேவைக்கும் 30 டி.எம்.சி நீரை வழங்கிய நடுவர் மன்றத்தின் உத்தரவில் உடன்படுகிறோம் எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில்அண்மையில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், காவிரிப் படுகையில் அல்லாத, பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக 4.75 டி.எம்.சி நீர் வழங்கியதைப் போல 13 லட்சம் மக்கள் வசிக்கும் கோழிக்கோடு மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக ரூ. 1,613. 22 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ள பானசுரசாகர் திட்டத்துக்கு வழங்கப்பட்ட நீரில் 5 டி.எம்.சியை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

இந்த நீரை வழங்காவிட்டால், குட்டியாடி பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள 36 ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டு நிலமும், வட கேரளத்தில் பாசனம், மின் விநியோகம் பாதிக்கப்படும். எனவே, கேரளத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 30 டி.எம்.சி நீரைக் கொண்டு, காவிரிப் படுகையில் உள்ள பானசுரசாகர் திட்டத்துக்காக 5 டி.எம்.சி நீரை பயன்படுத்தும் வகையில் தீர்ப்பில் திருத்தம் செய்ய வேண்டும். அல்லது விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து