முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டத்தில் ரஜினி கட்சியை சேர்ந்த 146 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தின் புதிய கட்சிக்கு திண்டுக்கல் மாவட்ட செயலாளராக எஸ்.எம்.தம்புராஜ் நியமிக்கப்பட்டிருந்தார். அவரை கடந்த 15ம் தேதி ரஜினி மக்கள் மன்றத்தின் கொள்கை கோட்பாட்டிற்கு விரோதமாக செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. இது அக்கட்சியின் புதிய பொறுப்பாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஜினிகாந்த் கட்சியின் மாவட்ட துணை செயலாளர்கள் எம்.குணசேகரன், கே.தண்டபாணி, ஆர்.வெங்கடேசன் ஆகியோர்  நிருபர்களிடம் தெரிவிக்கையில், மாவட்ட செயலாளராக எஸ்.எம்.தம்புராஜ் நியமிக்கப்பட்டிருந்தார். அவரை திடீரென நீக்குவதாக தலைமைக் கழகம் அறிவித்திருப்பது பேரதிர்ச்சியை தருகிறது. நீக்கத்திற்கான விளக்கமும் அவரிடமும் கேட்கப்படவில்லை. எனவே இதனை எதிர்க்கும் விதமாக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ரஜினி சரவணன், மாவட்ட வழக்கறிஞர் அணி ஆர்.சரவணன், மாவட்ட இளைஞரணி ஏ.கதிரேசன், மாவட்ட விவசாய அணி எஸ்.சிக்கந்தர், மாவட்ட மகளிரணி மாரியம்மாள்; உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் 8 பேரும், எஸ்.எம்.தம்புராஜோடு நியமனம் செய்யப்பட்டிருந்த 146 ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர்களும் ராஜினாமா செய்து ரஜினிகாந்திடம் கடிதம் வழங்கவுள்ளோம் என்று தெரிவித்தனர். அதற்கான ராஜினாமா கடிதத்தையும் நிருபர்களிடம் காண்பித்தனர்.

கட்சி பெயர் அறிவிக்கப்படவில்லை. கொடியும் அறிமுகப்படுத்தப்பட வில்லை. கொள்கைகளையும் விளக்கம் செய்யப்பட வில்லை. இவ்வாறு இருக்க புதிய கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே நிர்வாகிகள் ராஜினாமா செய்திருப்பது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்திருப்பது போல பல்வேறு மாவட்டங்களிலும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டதில் குழப்பமும் ஏமாற்றமும் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து