முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ராமநாதபுரம் கல்லூரியில் உலக சுகாதார தின விழா

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,-ராமநாதபுரம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் உலக சுகாதார தினவிழா நடைபெற்றது.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் கிளை சார்பாக ராமநாதபுரம் அருகே ஆர்.கே. சாமி கல்வியியல் கல்லூரியில் உலக சுகாதார தின விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி துணை முதல்வர் ஜி. செந்தில்குமார் தலைமை வகித்தார். முதலாமாண்டு மாணவி எஸ். ஐஸ்வர்யா லட்சுமி வரவேற்றார். முதலுதவி பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சி பற்றி பயிற்றுனர் எஸ்.அலெக்ஸ் செயல் முறை  விளக்கம் அளித்து மாணவர்களை பயிற்சியில் ஈடுபடுத்தினார். அனைவருக்கும் சுகாதாரம் பற்றி பலகுரலில் பேசி ஆசிரியர் பயிற்றுனர் எம்.உலகராஜ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவியருக்கு ரெட் கிராஸ் சேர்மன் எஸ்.ஹாரூன், பொருளாளர் சி.குணசேகரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இரண்டாமாண்டு மாணவி எஸ்.கோமளா நன்றி கூறினார். கல்லூரியின் நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட்  மதுரம் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து