முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் பகுதியில் போலி ஆவணங்களுடன் மணல் கடத்தி வந்த 6 லாரிகள் பறிமுதல்: வட்டாட்சியர் நாகரத்தினம் நடவடிக்கை:

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் பகுதியில் வட்டாட்சியர் நாகரத்தினம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது நான்கு வழிச்சாலையில் போலி ஆவணங்களுடன் மணல் கடத்தி வந்த 6 டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதி நான்கு வழிச்சாலை வழியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அதிகளவில் மணல் கடத்தப்படுவதாக திருமங்கலம் வட்டாட்சியர் திருமதி.நாகரத்தினத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் வட்டாட்சியர் நாகரத்தினம் தலைமையிலான முதுநிலை வருவாய் உதவியாளர் மயிலேறிநாதன்,வருவாய் ஆய்வாளர்கள் சசிகுமார்,செந்தில்,முருகன்,கிராம நிர்வாக அலுவலர்கள் பிரசன்னா,பாண்டியராஜன் ஆகியோரை கொண்ட வருவாய்துறை அதிகாரிகள் குழு கப்பலூர்,ராஜபாளையம் விலக்கு,வமானநிலையச் சாலை மற்றும் நான்குவழிச்சாலை  பகுதிகளில் அதிரடியாக வாகன சோதனை   நடத்தினார்கள்.அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த மணல் லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியதில்  6 டாரஸ் லாரிகளில் தமிழக அரசின் முறையான அனுமதிச்சீட்டு இன்றி போலியான அனுமதிச்சீட்டு தயாரித்தும் திருட்டுத்தனமாக மணல் கடத்திச் செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து திருச்சி,கரூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  மணலை கடத்திச் சென்ற 6 டாரஸ் லாரிகளையும் திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம் பறிமுதல் செய்து   நடவடிக்கை  மேற்கொண்டார்.இதை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் அனைத்தும் தற்போது  திருமங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 6டாரஸ் லாரிகள்  மீது மேல்நடவடிக்கை எடுப்பதற்காக உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுவரை நான்கு வழிச்சாலையில் மணல் கடத்தி வந்த 25க்கும் மேற்பட்ட லாரிகள் திருமங்கலம் பகுதியில் வருவாய்த்துறையினரால் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து