முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. முடக்கத்தை கண்டித்து இன்று பா.ஜ.க. உண்ணாவிரதம்: பிரதமர் பங்கேற்பு?

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, பட்ஜெட் கூட்டத்தொடரில் பாராளுமன்றம் முடக்கப்பட்டதை கண்டித்து பா.ஜ.க எம்.பி.க்கள் இன்று  உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். பிரதமர் மோடியும் இதில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க. தெலுங்குதேசம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடத்திய போராட்டத்தால் பாராளுமன்ற அலுவல்கள் முடங்கின. பாராளுமன்ற முடக்கத்திற்கு காரணமான எதிர்க்கட்சிகளை கண்டித்தும், பாராளுமன்ற முடக்கத்துக்கு எதிராக பா.ஜ.க எம்.பி.க்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

அதன்படி, பா.ஜ.க எம்.பி.க்கள் அனைவரும் இன்று அவரவர் தொகுதியில் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். அதைப் போல பிரதமர் மோடியும், பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும் உண்ணாவிரதம் கடைப்பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, தினசரி பணிகள் பாதிக்காத வகையில்தான் பிரதமர் மோடியின் உண்ணாவிரதம் இருக்கும் என பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து