முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராம சுயாட்சி இயக்கத்தின்கீழ் ரூ.9.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மத்திய அமைச்சர் மற்றும் கலெக்டர் வழங்கினர்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ராமபுரம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன கலை அரங்கில்  பாரத பிரதமரின் ‘கிராம சுயராஜ் அபியான்” என்ற ‘கிராம சுயாட்சி இயக்கம்” திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான பாரத ரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் சமூக நீதிநாள் விழாவில்  மத்திய நிதி மற்றும் கப்பல்த்துறை இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் மற்றும் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே , ஆகியோர் நலத்திட்ட உதவிகளை   வழங்கினர்.

அம்பேத்கர் பிறந்த நாள்

அகில இந்திய அளவில் ‘கிராம சுயராஜ் அபியான்” என்ற ‘கிராம சுயாட்சி இயக்கம்” மூலம் 14.04.2018 முதல் 05.05.2018 முடிய சுய ஆளுமை முகாம் நடத்தி சமூக நல்லிணக்கம் உருவாகவும், அரசின் திட்டங்கள் ஏழை எளிய குடும்பங்களை சென்றடையவும், செயல்பாட்டிலுள்ள திட்டங்கள் குறித்த கருத்துக்களைக் கேட்டு, புதிய திட்டங்களில் பதிவு செய்து, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதோடு  வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்கச்செய்வதோடு, தேசிய தூய்மை இயக்கம் ஆகியவற்றின் மூலம் ஊராட்சித்துறை அமைப்புகளை வலுப்பெற செய்யவேண்டும். இவ்வியக்கப் பணியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை மற்றும் வேளாண்மைத் துறை ஆகிய துறைகளின்மூலம் செயலாற்றி, 18.04.2018 அன்று தூய்மை பாரத தினமாகவும், 20.04.2018 அன்று இலவச எரிவாயு வழங்குதல் மற்றும் பாதுகாப்பு பயன்பாடு தினமாகவும், 24.04.2018 அன்று தேசிய ஊராட்சி தினமாகவும், 28.04.2018 அன்று கிராம சுயாட்சி தினமாகவும், 30.04.2018 அன்று சுகாதார தினமாகவும், 02.05.2018 அன்று விவசாயிகள் தினமாகவும், 05.05.2018 அன்று திறன் வளர்ப்பு தினங்களாக கடைப்பிடிக்கவேண்டும்.  இவ்வியக்கத்தின் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் கண்காணிக்கப்படும். அதன்படி மாவட்ட அளவில் இந்த இயக்கத்தின் சார்பில் மேதகு டாக்டர் அம்பேத்கார் பிறந்த தினமான ஏப்ரல்-14 இன்று சமூக நீதி தினமாக கடைபிடிக்கப்பட்டது.இவ்விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மூலம்  12 நபர்களுக்கு சாதி சான்றிதழ்களும், தேசிய நகர்புற வாழ்வாதார இயத்தில் பயிற்சிபெற்ற 6 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணையும், மகளிர் திட்டம் மூலம் தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின்கீழ் 24 நபர்களுக்கு ரூ.9.80 இலட்சம் மதிப்பில் தொழில் மற்றும் தனிநபர் கடனுதவிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 800 இலவச மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.  முன்னதாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்இ மகளிர் திட்டம் ஆகிய துறைகள் மூலம் திட்ட செயலாக்கம் தொடர்பான  கண்காட்சிகள் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்கள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் திட்டம் தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. மத்திய இணை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டனர்.

இவ்விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வ) மற்றும் திட்ட இயக்குநர் ஆ.ர.ராஹ{ல்நாத் , மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்  சிவதாஸ், உதவி இயக்குநர்(ஊராட்சி)  சையத் சுலைமான், மாவட்ட வழங்கல் அலுவலர்  சந்திரன், திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) வே.பிச்சை, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்  பேச்சியம்மாள்இ மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்  செல்வி பியூலா, அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து