முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேசிய அளவில் ஒரே நடுவர் மன்றம்: மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, நாட்டின் கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த மேற்குவங்கம், பீகார், ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த நீ்ர் ஆதாரத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் கூட்டம் கொல்கத்தாவில் மத்திய நீர் ஆதாரத் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அர்ஜுன் ராம் பேசியதாவது,

தேசிய அளவில் அமையவுள்ள நடுவர் மன்றம், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதோடு, நீர்ப்பாசன வசதிகளையும் ஏற்படுத்தும். தற்போது காவிரி, நர்மதை, கிருஷ்ணா உள்ளிட்ட பல்வேறு நதிகளுக்கு நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மகாநதி ஆற்றுக்கான நடுவர் மன்றம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படி பல்வேறு நடுவர் மன்றங்களுக்கு பதிலாக ஒரே ஒரு நதி நீர் நடுவர் மன்றம் அமைக்க மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்சினை சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இது மக்களவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இந்த தேசிய அளவிலான நடுவர் மன்றம் செயல்பாட்டுக்கு வரும்போது, நடுவர்மன்ற தீர்ப்பே இறுதியானதாகும். அந்தத் தீர்ப்பை, அரசுகள் கட்டாயம் அமல்படுத்தியாக வேண்டும். தேசத்தின் பாதுகாப்புக்காக இதை மத்திய அரசு செய்யவுள்ளது. தண்ணீர் என்பது தேசத்தின் சொத்தாகும். இக்கூட்டத்தில் கிழக்கு மண்டலத்தில் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினை குறித்து விவாதித்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து