முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெச் 4 விசா திட்டத்தை ஒழிக்க டிரம்ப் அரசு முடிவு : அமெரிக்கவாழ் இந்தியர்கள் அதிர்ச்சி

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் :  அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கும் பிற நாட்டவர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி செய்தியை அளித்துள்ளது டிரம்ப் அரசு.

முன்னாள் அதிபர் பராக் ஓபாமா தலைமையிலான ஆட்சியின் போது அமெரிக்காவில் ஹெச்1பி விசா உடன் வாழும் வெளிநாட்டு மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் அவர்களின் துணைகள் (கணவன் / மனைவி) இந்நாட்டிலேயே பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பல ஆயிரம் இந்தியர்கள் பலன் பெற்றனர்.

தற்போது டிரம்ப் அரசு இத்தகைய முறையை முழுமையாக நீக்க முடிவு செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருவதாக அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் வாயிலாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மட்டும் அல்லாமல் பிற நாட்டவர்களும் அதிகளவிலான பாதிப்பை சந்திக்க நேரிடும்.

ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களின் மனைவி அல்லது கணவன் பட்டம் பெற்று இருக்கும் நிலையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க ஓபாமா அரசு காலத்தில் அந்நாட்டில் வேலை செய்ய ஹெச் 4 விசா அளித்தது. இது இந்தியர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது என்றால் மிகையாகாது.

தற்போது டிரம்ப் அரசு இத்திட்டத்தை முழுமையாக ரத்துச் செய்ய முடிவு செய்துள்ளதின் வாயிலாக ஹெச்1பி விசா பெற்றுள்ள சுமார் 70,000 பேர் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும்.
அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்கள் அந்நாட்டின் குடியுரிமை பெற வேண்டும் என்பதற்காக விண்ணப்பங்களை அதிகளவில் அளித்து வருவதால், இதனைத் தணிக்கை செய்யவும் ஆய்வு செய்யவும் 10 வருடத்திற்கும் அதிகமான காலம் தேவைப்படும் காரணத்தால் ஒபாமா அரசு ஹெச்1பி விசா வைத்துள்ள நபரின் துணை பணியாற்ற இத்திட்டத்தை ஓபாமா அரசு கொண்டு வந்தது.

ஜூன் 2017 வரையில் சுமார் 71,287 பேருக்கு ஹெச்4 விசா அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விசா தரவுகள் கூறப்படுகிறது. இதில் 94 சதவீதம் பேர் பெண்கள், அதிலும் 93 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைத் தொடர்ந்து சீனா 4 சதவீதமாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து