முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகர்மலையிலிருந்து கள்ளழகர் இன்று மாலையில் தங்கபல்லக்கில் மதுரைக்கு செல்கிறார்.

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

அழகர்கோவில்.-   மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள  கள்ளழகர் கோவிலில் உலக பிரசித்திபெற்ற சித்திரைப்பெருந்திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த வருடம் கடந்த 26ந் தேதி மாலையில் தொடங்கியது.நேற்று மாலையும் சுவாமி புறப்பாடு நடந்தது.இன்று (சனிக்கிழமை) தங்கப்பல்லக்கில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருள்கிறார்.கண்டாங்கி பட்டுடுத்தி கரங்களில் வளைதடிகள் பிடித்து சர்வ அலங்காரத்தில் மாலை 5.15 மணிக்கு மதுரையை நோக்கி புறப்படுகிறார் அப்போது பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு விசேஷ பூஜைகளும்,தீபாரதனைகளும் நடைபெறும் பின்னர் அங்கு வையாழி ஆன பிறகு சுவாமி செல்லும் வழிநெடுகே உள்ள மண்டபங்களில் அழகர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.நாளை 29ந்தேதி காலையில்  மூன்றுமாவடி பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து விளக்கேற்றி எதிர்சேவை செய்து அழகரை வணங்கி வரவேற்பார்கள்.தொடர்ந்து வழிநெடுக உள்ள மண்டபங்களில் காட்சி தந்து தல்லாகுளம் பெருமாள் கோவிலில் எழுந்தருள்வார்.அங்கு திருமஞ்சனமாகி நாச்சியார் ஆண்டாளுடைய மாலை பெருமாளுக்கு சாத்தப்படும்.
  தொடர்ந்து 30ந்தேதி திங்கட்கிழமை காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் அழகர் தங்ககுதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருள்கிறார் அப்போது இலட்சகணக்கான பக்தர்கள் குவிந்து கள்ளழகரை தரிசனம் செய்வார்கள்.1ந்தேதி செவ்வாய்கிழமை தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் எழுந்தருள்கிறார்.பின்னர் கெருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து அழகர் காட்சி தருவார்.அன்று இரவு தசாவதாரம் இராமராயர் மண்டபத்தில் நடைபெறும்.2ந்தேதி புதன்கிழமை அனந்தராயர் பல்லக்கில் பெருமாள் எழுந்தருள்வார்.3ந்தேதி வியாழக்கிழமை மன்னர் சேதுபது மண்டபத்தில் பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் அழகர் காட்சி தருவார். தொடர்ந்து கருப்பணசாமி கோவில் முன்பு பிரியாவிடை பெற்று திருமாலிருஞ்சோலை நோக்கி வழிநடையாக செல்கிறார்.4ந்தேதி வெள்ளிகிழமை காலையில் அப்பன்திருப்பதி,கள்ளந்திரி உள்ளிட்ட மண்டபங்களில் அழகர் காட்சி தருவார்.காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அழகர்மலைக்கு கள்ளழகர் திரும்பி சென்று கோவிலில் இருப்பிடம் சேருகிறார்.5ந்தேதி சனிக்கிழமை உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம்,நிர்வாக அதிகாரி மாரிமுத்து,மற்றும் கண்காணிப்பாளர்கள்,கோவில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.அப்பன் திருப்பதி போலிசார் பாதுகாப்பு பணிகளை கவனித்துவருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து