முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொளுத்தும் கோடை வெயிலில் குளுகுளு குளியல்: சாப்டூர் கேணி அருவியில் இளைஞர்கள் கும்மாளம்:

புதன்கிழமை, 9 மே 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும்  மழையியனால் சாப்டூர் அருகிலுள்ள கேணி அருவியில் தற்போது தண்ணீர் கொட்டுகிறது.இதனால் ஏராளமான இளைஞர்கள் சாப்டூருக்கு படையெடுத்து வந்து கேணி அருவியில் குதித்து குளித்து கும்மாளமிட்டு மகிழ்கின்றனர்.
இயற்கை எழில் கொஞ்சிடும் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் சரதுகிரி மலைபகுதியின் கீழே ஆண்டு முழுவதிலும் தண்ணீர் நிறைந்திருக்கும் புகழ்மிக்க சாப்டூர் கேணி அருவி உள்ளது.இங்குள்ள அருவிக்கு கீழ்புறம் அமைந்திருக்கும் கேணிபகுதி இளைஞர்கள் டைவ் அடித்துக் குளிக்கும் இயற்கையான நீச்சல் குளமாக திகழ்கிறது.பேரையூர் தாலுகா சாப்டூரிலிருந்து சிலமைல் தொலைவிலுள்ள இந்த அருவிக்கு சென்றிட இன்றுவரை போதுமான சாலை வசதி கிடையர்து.இருப்பினும் மாந்தோப்புகள் மற்றும் தென்னந்தோப்புகளின் வழியே அடர்ந்த இயற்கை வழிச் சாலையில் சுமார் 2கிலோமீட்டர் சென்றவுடன் சாப்டூர் கேணி அருவி தென்படுகிறது.கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில் இந்த கேணி அருவியில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
மழையில்லாத காலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்கசிவுகள் ஒன்றாகி சாப்டூர் கேணியில் 12அடி உயரத்திலிருந்து அருவியாக தண்ணீர் கொட்டுகிறது.அதே சமயம் மழைக்காலங்களில் அருவியில் அதிகளவு தண்ணீர் வந்து குளிக்கமுடியாத நிலையை ஏற்படுத்தி விடுகிறது.மழை இருந்தாலும்,இல்லாவிட்டாலும் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும் இந்த அருவியில் குளித்து மகிழந்திட பெரும்பாலும் இளைஞர்களே ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதற்கு காரணம் அருவிக்கு சென்றிட முறையான சாலை வசதி மற்றும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாதது தான்.தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையிலும் சாப்டூர் கேணி அருவியில் கோடைமழை காரணமாக தண்ணீர் அதிகளவு கொட்டுவதால் அதில் குளித்து மகிழந்திட ஏராளமான இளைஞர்கள்   இங்கு படையெடுத்து வர ஆரம்பித்துள்ளனர்.
பின்னர் கேணியில் தடாகம் போல் தேங்கியுள்ள தண்ணீரில் இளைஞர்கள் கூட்டம் பெரும் ஆரவாரத்துடன் டைவ் அடித்து குளித்து மகிழ்கின்றனர்.பிறகு கேணியின் மேலுள்ள 12உயரத்திலிருந்து தண்ணீர் கொட்டிடும் அருவிப் பகுதியில் குளித்திடும் இளைஞர்கள் கும்மாளமிட்டு மகிழ்கின்றனர். இருப்பினும் இன்பக்குளியல் மேற்கொண்டிட சாப்டூர் கேணி அருவிக்கு வரும் இளைஞர்களில் சிலர் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுவதுடன் குடித்த காலிபாட்டில்களை அருவிப்பகுதியில் உடைத்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக் கின்றனர்.எனவே சாப்டூர்கேணி அருவிக்கு செல்லும் பாதையை சீர்படுத்திட வேண்டும், இளைஞர்களை போன்று பெண்களும் குழந்தைகளும் குடும்பத்துடன் வந்து கோடை விடுமுறையில் உல்லாசமாக குளித்து மகிழந்திட தேவையான பாதுகாப்பு மற்றும் உடைமாற்றும் வசதிகள்  செய்து தந்திட வேண்டும் என்பதே கோடையில் சாப்டூர் கேணி அருவியில் குளித்து மகிழந்திடலாம் என்ற ஏக்கத்துடன் காத்திருப்போரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து