முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக வலைதளத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பியவர் கைது

வெள்ளிக்கிழமை, 11 மே 2018      தமிழகம்
Image Unavailable

திருவண்ணாமலை: குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய வீரரராகவன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாட்ஸ் ஆப்பில்...
குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்திருந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வடமாநிலங்களில் இருந்து 100 பேர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்திருப்பதாக வாட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றை வாட்ஸ் ஆப்பில் புரிசை கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்ற இளைஞரை பகிர்ந்துள்ளார்.

வீரராகவன் கைது...
இதைடுத்து போலீஸார் நடத்தி விசாரணையில் வாட்ஸ்அப்பில் வெளியானது வதந்தி என நிருபிக்கப்பட்டதால். வதந்தி பரப்பிய புரிசை கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்பவரை செய்யாறு அருகே அனக்காவூர் போலீஸார் கைது செய்தனர். மேலும் வீரராகவன் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த நபர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

நம்ப வேண்டாம்
குழந்தை கடத்தல் வதந்தியால் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் பீதியில் உள்ளனர். வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். 4 மாவட்டங்களில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க காவல்துறை அறிவித்துள்ளது. குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து