முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரைவு திட்டம் தாக்கல்: தமிழகத்துக்கு நாளை நல்லதீர்ப்பு கிடைக்கும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

திங்கட்கிழமை, 14 மே 2018      தமிழகம்
Image Unavailable

சேலம் : காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்திற்கு வரும் பதினாறாம் தேதி நல்ல தீர்ப்பு கிடைக்கும் என தமிழக முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தாக்கல் செய்தது

தமிழகதிற்கு காவிரி நீர் வழங்குவது குறித்து சுப்ரீம் கோர்ட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி இருந்தது, ஆனால் மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது. இந்த நிலையில் மத்திய அரசுக்கு காவிரி விவகாரத்தில் வரைவு திட்ட அறிக்கையை நேற்று தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து மத்திய அரசு நேற்று காவிரி விவகாரத்தில் வரைவு திட்ட அறிக்கையை சுப்ரீம் கோர்ட் தாக்கல் செய்தது.

முதல்வர் பேட்டி

இது குறித்து சுப்ரீம் கோர்ட் வரும் பதினாறாம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது. இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் சேலம் ஏற்காடு கோடைவிழா துவக்க விழாவிற்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சேலத்தில் இருந்து திருப்பதிக்கு பயணம் மேற்கொண்டபோது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி மத்திய அரசு வரைவு திட்ட அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது. அதில் பல்வேறு அம்சங்கள் அடங்கியுள்ளது. இந்த வழக்கு வரும் பதினாறாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பதினாறாம் தேதி சுப்ரீம் கோர்ட் என்ன உத்தரவு பிறபிக்குமோ அதனை மத்திய அரசு செயல்படுத்தும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் கூறியுள்ளார்.

நல்ல தீர்ப்பு வழங்கும்

எனவே நிச்சயமாக வரும் பதினாறாம் தேதி தமிழகத்திற்கு சுப்ரீம்கோர்ட்டு நல்ல தீர்ப்பு வழங்கும் என நம்புவதாக கூறினார். கோதாவரி நீர் திட்டம் குறித்த கேள்விக்கு முதல்வர் கூறுகையில், கோதாவரி திட்டம் வேறு காவிரி நீர் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் என்பது வேறு என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து