முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்லர் அதிரடியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

திங்கட்கிழமை, 14 மே 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : மும்பையில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ரோகித் அவுட்

மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். தொடரின் 47-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரகானே பந்து வீச்சை தேர்வு செய்தார். மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 87 ரன்னாக இருந்தபோது சூர்யகுமார் யாதவ் 38 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரோகித் சர்மா முதல் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

168 ரன்கள்

மறுமுனையில் சிறப்பாக ஆடிய எவின் லெவிஸ் 42 பந்தில் 60 ரன்னிலும், இஷான் கிஷான் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். குருணால் பாண்டியா 3 ரன் எடுத்து அவுட்டானார். ஹர்திக் பாண்ட்யா 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 36 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும், தவால் குல்கர்னி, உனத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷார்ட்டும், ஜோஸ் பட்லரும் இறங்கினர்.

ராஜஸ்தான் வெற்றி

ஷார்ட் 4 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் ரகானே பட்லருக்கு ஓரளவு கம்பெனி கொடுத்தார். இருவரும் இணைந்து 95 ரன்கள் சேர்த்தனர். ரகா8னே 37 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஜோஸ் பட்லர் தூணாக நின்று சிக்சர், பவுண்டரியுமாக விளாசி அரை சதம் கடந்தார். அவருக்கு சஞ்சு சாம்சன் ஈடுகொடுத்தார். சாம்சன் 26 ரன்னில் அவுட்டானார். இறுதியில், ராஜஸ்தான் அணி 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து