காவிரி அமைப்பின் தலைமையிடம் பெங்களூரு அல்ல - டெல்லிதான் சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு தமிழகம் வரவேற்பு

புதன்கிழமை, 16 மே 2018      இந்தியா
Supreme Court(N)

புதுடெல்லி: காவிரி அமைப்பின் தலைமையிடம் பெங்களூரில் இருக்கக் கூடாது. டெல்லியில்தான் இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது தமிழகத்திற்கு சாதகமான ஒரு அம்சமாகும்.

பல்வேறு உத்தரவு...
காவிரி வரைவு திட்ட அறிக்கை குறித்த விசாரணை நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள திட்ட அறிக்கையை ஏற்க வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கடந்த விசாரணையில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது. நேற்று மீண்டும் இது தொடர்பான விசாரணை நடந்தபோது, மாநிலங்களின் வாதத்தை சுப்ரீம் கோர்ட்  கேட்டறிந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. பெங்களூரில் காவிரி அமைப்பின் தலைமையிடம் அமைக்கப் போவதாக மத்திய அரசு கூறியதை சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை. டெல்லியில் தலைமையிடத்தை அமைக்க சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியது.

சாதகமான அம்சம்
பெங்களூரில் காவிரி அமைப்பை ஏற்படுத்தினால், பிரச்சினையான காலகட்டங்களில் அங்கு தமிழக பிரதிநிதிகள் செல்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருந்தது. மேலும், காவிரி கர்நாடகாவிற்கே சொந்தம் என்ற தோற்றத்தை ஏற்படுத்த இது வகை செய்தது. எனவே சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி டெல்லியில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அமைப்பை உருவாக்குவது தமிழகத்திற்கு சாதகமான அம்சமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து