பி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி

வியாழக்கிழமை, 17 மே 2018      வர்த்தகம்
panjab bank 2018 01 02

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மார்ச் காலாண்டு நஷ்டம் ரூ.13,416 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.320 கோடியாக நிகர லாபம் இருந்தது. வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.4,466 கோடியாக இருந்த ஒதுக்கீட்டு தொகை தற்போது ரூ.20,353 கோடியாக அதிகரித்திருக்கிறது.

கடந்த ஆண்டு ரூ.14,989 கோடியாக இருந்த மொத்த வாராக்கடன் தற்போது ரூ.12,945 கோடியாக குறைந்திருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 18.38 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. நஷ்டம் அதிகரித்திருப்பதால் பிஎன்பி பங்கு 6 சதவீதம் அளவுக்கு வர்த்தகத்தின் இடையே சரிந்தது. நேற்று மட்டும் சந்தை மதிப்பு ரூ.938 கோடி அளவுக்கு சரிந்தது.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து