முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப் போன்ற நண்பர்கள் இருக்கும் வரை எதிரிகளுக்கு அவசியம் இல்லை ஐரோப்பிய யூனியன் தலைவர் விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 18 மே 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை போன்ற நண்பர்கள் இருக்கும் வரை, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு வேறு எதிரிகளே தேவையில்லை என்று அந்த அமைப்பின் தலைவர் டொனால்ட் டஸ்க் விமர்சித்துள்ளார்.

இது குறித்து பல்கேரிய தலைநகர் சோபியாவில் நடைபெற்ற, ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளின் மாநாட்டில் அவர் பேசியதாவது,
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அண்மைக் கால முடிவுகளைப் பார்க்கும் போது, அவரைப் போன்ற நண்பர்கள் இருக்கும் வரை நமக்கு வேறு எதிரிகளே தேவையில்லை என்று தோன்றுகிறது. அவர் கைவிட்டதால் ரத்தாகும் நிலையில் உள்ள ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாக்கவும், ஐரோப்பிய நாடுகளின் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அவரது முடிவை எதிர்கொள்ளவும் ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து வலிமையான கூட்டணியை அமைக்க வேண்டும்.

காலம் காலமாக சீனாவின் எழுச்சி, ரஷியாவின் மிரட்டல் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்த நாம், தற்போது டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு என்ற புதிய அச்சுறுத்தலை எதிர் கொண்டுள்ளோம் என்றார் அவர்.

தனது அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டன.

ஒபாமா அதிபராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சியின் பலனாக உருவான இந்த ஒப்பந்தம், அமெரிக்கப் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை என்று விமர்சித்து வந்த டிரம்ப், அந்த ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக டிரம்ப் கடந்த வாரம் அறிவித்தார். இதற்கு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிற நாடுகளான ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து