முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக கவர்னர் ராஜினாமா செய்ய வேண்டும் சீதாராம் யெச்சூரி, சரத் பவார் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2018      இந்தியா
Image Unavailable

மும்பை: கர்நாடக மாநில கவர்னர் வஜுபாய் வாலா ராஜினாமா செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் எச்சூரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து சுட்டுரையில் எச்சூரி  வெளியிட்ட பதிவில், "கர்நாடகத்தில் பா.ஜ.கவை ஆட்சி அமைக்க அழைத்தது தவறானது என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது என்பதால் அந்த மாநில கவர்னர் வஜுபாய் வாலா ராஜினாமா செய்ய வேண்டும். எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த உடன், ஊழல்கள் நிறைந்த பா.ஜ.க வீழ்த்தப்பட்டுள்ளது என்று சுட்டுரையில் எச்சூரி பதிவு வெளியிட்டிருந்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பேரத்துக்கு அடிபணியாமல் இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கு வாழ்த்துகள். ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏக்கள் தங்கள் வசம் இல்லாத நிலையில், எடியூரப்பாவை பா.ஜ.க முதல்வராக்கியிருக்கக் கூடாது. அது ஜனநாயகத்தை சிதைப்பதற்கு சமமாகும். இந்தச் செயலில் சம்பந்தப்பட்ட அந்த மாநில கவர்னரும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து