முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் களைப்படைந்து விட்டேன்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஏ.பி. டிவில்லியர்ஸ் திடீர் ஓய்வு அறிவிப்பு

புதன்கிழமை, 23 மே 2018      விளையாட்டு
Image Unavailable

நடப்பு ஐ.பி.எல். தொடரில் கலக்கிய தென் ஆப்பிரிக்க அதிரடி கிரிக்கெட் வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது திடீர் அறிவிப்பு கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

360 டிகிரி வீரர்...

360 டிகிரி வீரர் என்று பெயர் பெற்ற மிகச்சிறந்த அதிரடி வீரர் திடீரென ஓய்வு அறிவித்தது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நீண்ட காயத்துக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆடவந்த டிவில்லியர்ஸ் ஜிம்பாப்வேவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடி, பிறகு இந்திய அணி அங்கு சென்றபோது கலக்கல் இன்னிங்ஸ்களை ஆடி தென் ஆப்பிரிக்க வெற்றியில் பெரிய பங்களிப்பு செய்தார், பீல்டிங்கில் கூட அவர் சோடைபோகவில்லை என்பதை இந்த ஐபிஎல் கிரிக்கெட்டிலும் பார்த்தோம்.

இந்திய தொடருக்குப் பிறகு சர்ச்சைகள் நிரம்பிய ஆஸ்திரேலிய தொடரில் மிகச்சிறப்பாக ஆடி ஆஸ்திரேலியாவுக்குத் தலைவலி கொடுத்தார்.  மேலும் உலகக்கோப்பையை வெல்வதே முக்கியம் என்று கூறிவந்தவர், திடீரென உலகக்கோப்பை வெல்வது என்ற அழுத்தம் இனி தனக்கு இல்லை என்று திடீரென ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அப்போதே அவர் ஓய்வு பெறுவதைத்தான் இவ்வாறு சூசகமாகக் கூறினார் என்ற ஐயம் எழுந்தது.

மேலும் மீண்டும் டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்துவேன் என்று கூறியவர் குறைந்தது உலகக்கோப்பை வரையிலாவது சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, இந்நிலையில் அவர் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.

உருக்கமான பேச்சு..

நான் களைப்படைந்து விட்டேன். அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் உடனடியாக ஓய்வு பெற முடிவெடுத்து விட்டேன்.  இது மிகவும் கடினமான முடிவுதான். நான் நீண்ட சிந்தனைக்குப் பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளேன். 114 டெஸ்ட் போட்டி, 228 ஒருநாள் போட்டி 78 டி20 சர்வதேச போட்டிகள், இதற்குப் பிறகு மற்றவர்கள் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். என்னுடைய வாய்ப்புகளை பெற்று விட்டேன், நேர்மையாகக் கூற வேண்டுமெனில் நான் களைப்படைந்து விட்டேன்.

வீரர்களுக்கு நன்றி...

ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எதிரான அபார வெற்றிக்குப் பிறகே இதுதான் ஓய்வு பெற சரியான தருணம் என்று நான் கருதுகிறேன். தென் ஆப்பிரிக்காவுக்காக நான் எப்போது, எங்கு ஆடுவேன் என்பதை நான் தீர்மானித்து முடிவெடுக்க முடியாது. அது சரியானதல்ல. இது எனக்கு அனைத்தும்தான் ஒன்றும் இல்லையும்தான், எனக்கு ஆதரவு அளித்த தென் ஆப்பிரிக்கா ரசிகர்கள் பயிற்சியாளர்களுகு நன்றிக்கடன் பட்டுள்ளேன். என் வாழ்நாள் முழுதும் என்னுடன் ஆடிய வீரர்களுக்கும் நன்றி. இவர்களது ஆதரவின்றி அரை வீரராகக் கூட உருப்பெற்றிருக்க மாட்டேன்.

சரியான தருணம்

வேறு லீகுகளில் இன்னும் சம்பாதிக்கும் நோக்கத்தினால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை. நான் களைப்பினால் தீர்ந்து போய்விட்டேன். இதுதான் சரியான தருணம். அனைத்தும் முடிவுக்கு வர வேண்டியதுதான். உலகம் முழுதும் உள்ள ரசிகர்கள், தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் என்னிடம் காட்டிய பெருந்தன்மைக்கு நன்றி.

உங்கள் புரிதலுக்காக, அயல்நாடுகளில் ஆடும் திட்டம் இல்லை. ஆனாலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் டைட்டன்ஸ் அணிக்கு தொடர்ந்து ஆடுவேன், டுபிளெசிஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் மிகப்பெரிய ஆதரவாளராக நான் இருப்பேன். இவ்வாறு டிவில்லியர்ஸ்உருக்கமாக பேசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து