முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத்தேர்தல் தோல்வி எதிரொலி உ.பி. முதல்வருக்கு வலுக்கும் எதிர்ப்பு

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ, உத்தரப்பிரதேசத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் மூலம், மூன்று முக்கிய தொகுதிகளை பா.ஜ.க இழந்துள்ளது. அதில் கிழக்கு(கோரக்பூர்), மத்திய(புல்பூர்) மற்றும் மேற்கு(கைரானா மற்றும் நூர்பூர்) ஆகியவை அடங்கும். இரட்டை தோல்விகள் மூலம், கடந்த 2014-ல் பா.ஜ.க.வின் பிரம்மாண்ட வெற்றிக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது. கைரானா தொகுதி தோல்வி மூலம், ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வை வீழ்த்தி, 2014ல் பெற்ற 71 மக்களவை தொகுதிகளை சிதறடிக்க முடியும் என்று நிரூபணமாகியுள்ளது. இடைத்தேர்தல் தோல்வி மூலம் உ.பி.,யில் ஆளும் பா.ஜ.க.விற்கு சரிவு ஏற்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில்  முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலம் கைரானா மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் தோல்விக்கு முதல் யோகியே காரணம் என அம்மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் கூறியுள்ளார். முதல்வர் யோகியை கண்டித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. சியாம் பிரகாஷ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து