முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் எப்போதும் ஒன்றாக செல்ல முடியாது பாக்.கிற்கு நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: எப்போதும் பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாகச் செல்ல முடியாது என்று பாகிஸ்தானுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்து இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் செய்யப்பட்டது. இருநாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தினை மதிக்காத பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லை பகுதியில் தாக்குதல் நடத்துகிறது. அத்துடன் இந்தியாதான் தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறது என குற்றம் சாட்டும் பாகிஸ்தான், அமைதியை விரும்புகிறோம் என்பதற்காக பலவீனமாக உள்ளோம் என்று எண்ண வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்தது. இரு நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்டும் வகையில் இருநாட்டு அதிகாரிகள் மத்தியில் எல்லையில் நேற்று முன்தினம் திட்டமிடப்பாடாத அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில் பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாகச் செல்ல முடியாது என்று பாகிஸ்தானுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா மதிப்பளிக்கிறது. ஆனால் அதே சமயம் பாகிஸ்தான் இந்தியப் பிராந்தியத்தில் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டால் இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுக்கும். எப்போதும் பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாகச் செல்ல முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து