முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.வில் கண்டன தீர்மானம்

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் கடந்த மார்ச் மாத இறுதி முதல் பாலஸ்தீன மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 129 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அல்ஜீரியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா. சபையில் கண்டன தீர்மானங்களை கொண்டு வந்தன.

இந்த தீர்மானத்தை எதிர்த்து அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே பேசிய போது, காஸா வன்முறைக்கு ஹமாஸ் இயக்கமே காரணமாகும். எதற்கெடுத்தாலும் இஸ்ரேல் மீது பழி சுமத்துவது சிலருக்கு அரசியல் விளையாட்டாக மாறி விட்டது என்றார். இறுதியில் தீர்மானம் 120 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து