முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமேதியில் 2 நாள் ராகுல் சுற்றுப்பயணம்

திங்கட்கிழமை, 2 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

அமேதி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை புதன்கிழமை அமேதி செல்கிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான அமேதி மக்களவைத் தொகுதிக்கு நாளை புதன்கிழமை இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்கிறார்.

தனது தொகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளையும் பார்வையிடும் ராகுல், அங்கு பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஜனவரி 16-ஆம் தேதி ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கு மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின்போது பா.ஜ.க.வினர் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன், 'காணாமல் போய்விட்ட தொகுதி எம்.பி.' என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காங்கிரஸாருக்கும் பா.ஜ.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து அவரது சுற்றுப் பயணத்துக்கான வழித்தடம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து