முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆணையத்தின் உத்தரவை ஏற்க முடியாதாம்! வட்டாள் நாகராஜ் திமிர் பேச்சு

வியாழக்கிழமை, 5 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு: தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்றும் வழங்கினால் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் வாட்டாள் நாகராஜ் மிரட்டல்  விடுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆணையத்தின் தலைவர் மசூத் அசார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நதிநீர் பங்கீடு தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ஜூலை மாத பங்காக தமிழகத்துக்கு 31 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து வரும் 7-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.

தமிழகத்திற்கு 31 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற ஆணையத்தின் உத்தரவை ஏற்று கொள்ள முடியாது என்று ஒன்றுபட்ட கன்னட அமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து வரும் 10-ம் தேதி அனைத்து கன்னட அமைப்புகளும் ஒன்று சேர்ந்து கூட்டமொன்று நடத்த முடிவு செய்துள்ளதாக கூறினார். அந்த கூட்டத்தில் மாநிலம் தழுவிய பந்த் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என்றார். வட்டாள் நாகராஜ் போன்ற ஆட்கள் இருப்பதால்தான் காவிரி பிரச்சினைக்கு எப்போதும் முட்டுக்கட்டை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இது போன்ற ஆட்களுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து