முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 40,000 கன அடி நீர் திறப்பு மேட்டூர் அணை நீர்மட்டம் உயருகிறது

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்: தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடக மாநில அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் அளவு விநாடிக்கு 40,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூர், மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணை வேகமாக நிறைந்தது. கபினி அணையின் முழு கொள்ளளவு எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் அணையில் இருந்து கூடுதலாக உபரி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திறக்கப்படும் காவிரி நீரின் அளவு விநாடிக்கு 35,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினியில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுவதால் தமிழகத்தில் ஒகனேக்கல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து அங்கு பயணிகள் குளிக்கவும், பரிசல் ஓட்டவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இருந்து கூடுதலாக தண்ணீர் வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 65 அடியாக உள்ளது. கர்நாடகத்தில் தொடர்ந்து மழை நீடித்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து