விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: காலிறுதியில் கடும் நெருக்கடி கொடுத்து பெடரரை வீழ்த்திய கெவின் ஆண்டர்சன்

வியாழக்கிழமை, 12 ஜூலை 2018      விளையாட்டு
kevin anderson beat federar 2018 7 12

லண்டன் : விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் காலிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மூன்றரை மணி நேரம் போராடி தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

8-ம் நிலை வீரர்...

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இரண்டாவது காலிறுதியில் முதல் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 8ம் நிலை வீரரான தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார்.

கடும் போராட்டம்...

பெடரர் முதல் செட்டை 5-2, இரண்டாவது செட்டை 7-6 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆண்டர்சன் 5-7, 4-6 என அடுத்த இரண்டு செட்களை கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட்டில் இருவரும் தீவிரமாக போராடினர். இறுதியில், ஆண்டர்சன் 11-13 என் அந்த செட்டை கைப்பற்றி அசத்தினார்.

ஆட்டத்தின் முடிவில் 6-2, 7-6, 5-7, 4-6, 11-13 என்ற கணக்கில் பெடரர் போராடி தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து