முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டனில் அதிபர் டிரம்புக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம் பலூன்களை பறக்க விட்டு கண்டனம்

சனிக்கிழமை, 14 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

லண்டன்: இங்கிலாந்து சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிரம்பே திரும்பி போ என்ற முழக்கத்துடன், அவரை கிண்டல் செய்து பலூன்களை பறக்க விட்டும் அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, அகதிகளுக்கு தடை, வெளிநாட்டினருக்கு விசா அளிப்பதில் கட்டுப்பாடு, வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதி மீது கூடுதல் வரி, விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் டிரம்ப், அவரது மனைவி மெலினா ஆகியோர் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே, ராணி எலிபெத் உள்ளிட்டோரை டிரம்ப் சந்தித்து ஆலோசனை நடத்தினார். டிரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டிரம்ப் திரும்பி போ என்ற கோஷத்துடன் லண்டனில் பேரணிகள் நடந்தன.

சமூக வலைத்தளங்களிலும் கண்டனங்கள் எழுந்தன. லண்டன் மையப்பகுதியில் உள்ள சதுக்கத்தில் திரண்ட ஆயிரக்கணக்கானோர் டிரம்புக்கு எதிராக கண்டன பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க பல பகுதிகளில் இருந்து வந்திருந்த எதிர்ப்பாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் டிரம்ப் பேபி பலூன் ஒன்றை  பறக்க விட்டனர். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இந்த போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அரசு, அமெரிக்காவுக்கு எதிரான போராட்டமாக இதை பார்க்கத் தேவையில்லை, அதிபர் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டமாகவே பார்க்கிறோம் என தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து