முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கியூபா: அரசியல் சாசனத்தில் சீர்திருத்தம்

திங்கட்கிழமை, 16 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

கியூபா : கியூபா அரசியல் சாசனத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அதற்கான தீர்மானம் அடுத்த மாதம் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

1976-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட அரசியல் சாசனத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் திருத்தங்களின் மூலம், அரசின் கட்டமைப்பு, நீதிமன்றங்கள், பொருளாதாரம் ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

திருத்தப்பட்ட அரசமைப்புச் சட்டத்திலும் கியூபாவின் முழு அரசியல் அதிகாரம் மிக்க கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி திகழும்; கம்யூனிச கொள்கைகள் தொடர்ந்து பின்பற்றப்படும்; எனினும், பொருளாதார தாரளமாயமாக்கலுக்கும் இடமளிக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து