முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் நாளை முதல் லாரி ஸ்டிரைக் தொடக்கம்

புதன்கிழமை, 18 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சேலம்: நாடு முழுவதும் நாளை முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடபோவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

65 லட்சம் லாரிகள் பங்கேற்பு
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணமாக ரூ.18 ஆயிரம் கோடியை பெற்றுக் கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை 3 மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயிப்பதோடு ஜி.எஸ்.டி.வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். லாரி உள்ளிட்ட மோட்டார் வாகனங்களுக்கான 3-ம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை (20-ந்தேதி) முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடபோவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் 65 லட்சம் லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்கின்றன.

தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் பங்கேற்பு
தமிழகத்தில் லாரி ஸ்டிரைக் தீவிரமாக நடை பெறும் என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. 4.5 லட்சம் லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்று ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை அந்தந்த மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் செய்துள்ளனர்.  சேலத்தில் லாரி ஸ்டிரைக்கில் பங்கேற்க இருக்கும் லாரிகளில் ஸ்டிரைக் அறிவிப்பு நோட்டீசுகள் ஒட்டப்பட்டு வருகின்றன. செவ்வாய்ப்பேட்டை லாரி மார்க்கேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து லாரிகளிலும், அந்த நோட்டீசை டிரைவர்கள் ஒட்டினார்கள்.

சரக்குகள் தேக்கம்
ஏற்கனவே, லாரி ஸ்டிரைக்கிற்கு தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்து கடந்த 15-ந்தேதி முதல் வடமாநிலங்களுக்கான சரக்கு புக்கிங்கை நிறுத்தி விட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள குடோன்களில் ஜவ்வரிசி, ஸ்டார்ச், ஜவுளி, இரும்பு, சிமெண்ட், தானியங்கள், மஞ்சள், பால் பவுடர் உள்ளிட்டவைகள் கோடிக்கணக்கில் தேக்கமடைந்துள்ளது. தினமும் வடமாநிலங்களுக்கு அனுப்பப்படும் ரூ.5 ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கமடைந்து வருவதாக புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளன மாநில தலைவர் ராஜவடிவேல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து