முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் நகரில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு:

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்-மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருமங்கலம் நகர் பகுதியில் முறையான அங்கீகாரமின்றி பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்றிடும் தனியார் வாகனங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் பூர்ணலதா,திருமங்கலம் நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் லட்சுமணன் தலைமையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.திருமங்கலம் டி.எஸ்.பி., அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில் முறையான அங்கீகாரம் பெற்றிடாமல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வந்த 20க்கும் மேற்பட்ட ஆட்டோ,மாருதி வேன் உள்ளிட்ட தனியார் வாடகை வாகனங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அப்போது வாகனத்தின் சான்றுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது.அப்போது உரிய ஆவணங்களின்றி குழந்தைகளை எற்றி வந்ததாக 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.பள்ளிக்கு சென்றிடும் குழந்தைகளின் நலன் கருதி நடைபெற்ற இந்த சோதனையின் போது முறையான அனுமதி பெற்ற பின்னரே பள்ளிக் குழந்தைகளை வாகனத்தில் ஏற்றிச் சென்றிட வேண்டும்,அதே சமயம் உரிய முறையில் பணம் கட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தால் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்றிட வாகனங்களுக்கு உரிமம் தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து