முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுக்கு வந்த அகதி குழந்தைகள் 1,187 பேர் பெற்றோரிடம் ஒப்படைப்பு

புதன்கிழமை, 25 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அடைக்கலம் தேடி அமெரிக்காவுக்கு வந்த அகதிகளிடமிருந்து பிரிக்கப்பட்ட அவர்களது 1,187 குழந்தைகள், பெற்றோர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு நீதித் துறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

அகதிகளிடமிருந்து அவர்களது குழந்தைகளை பிரிக்கும் நடைமுறையைக் கைவிடுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளதையடுத்து, இதுவரை 1,187 சிறுவர்கள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பெற்றேரிடமிருந்து பிரிக்கப்பட்ட, 5 மற்றும் அதற்கு மேல் வயது கொண்ட 2,551 சிறுவர்களை அதிகாரிகள் இனம் கண்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக தஞ்சம் புகுவதற்கு எதிராக அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்த கடுமையான கொள்கைக்குப் பிறகு, எல்லை தாண்டி வரும் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளையும், சிறுவர்களையும் பிரித்து தனியாக அடைத்து வைக்கும் நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டது. இது, உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதையடுத்து, சர்ச்சைக்குரிய அந்த நடைமுறையைக் கைவிடுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து