முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கி தருவதாக கூறி பணம் பறிக்கும் கும்பலிடம் ஏமாற வேண்டாம் மாணவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

வியாழக்கிழமை, 26 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பு, பி.டி.எஸ். பல் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறிக்கும் கும்பலிடம் ஏமாற வேண்டாம் என்று மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை எச்சரித்துள்ளது.

பெரிய அளவில்...
இது குறித்து சுகாதார சேவைகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சீட்டுகளை பெற்றுத் தருவதாகவும் அதே போல, நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் சீட்டுகளைப் பெற்றுத் தருவதாகவும் சில இடைத் தரகர்கள் மாணவர்களை பெற்றோர்களை அனுகுகின்றனர். இடைத் தரகர்கள் சீட் வாங்கித் தருவதற்காக பெற்றோர்களிடம் பெரிய அளவில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி ஏமாற்றும் சம்பவங்கள் நடப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

ஊக்குவிப்பதில்லை...
மத்திய சுகாதார சேவைகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கவுன்சில் குழுவானது இத்தகைய எந்த நடைமுறைகளையும் ஊக்குவிப்பதில்லை. எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இட ஒதுக்கீடுகள் நீட் தேர்வு தரவரிசையின் அடிப்படையில் இணைய தள கலந்தாய்வின் மூலமே நடைபெற்று வருகின்றன. மேலும், அந்தந்த கல்லூரிகளில் நிரப்பப்படும் இடங்களின் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

பொறுப்பேற்காது...
அதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடைத்தரகர்கள் மற்றும் ஏமாற்றுப் பேர்வழிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். இடைத்தரகர்களின் வலையில் விழுந்து பணத்தை இழந்தால் அதற்கு மத்திய சுகாதாரத்துறையோ, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககமோ, மருத்துவக் கலந்தாய்வுக் குழுவோ, எந்த வகையிலும் பொறுப்பேற்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து