முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகஸ்ட், செப்டம்பரில் தென்மேற்கு பருவமழை 95 சதவீதம் இருக்கும் - இந்திய வானிலை மையம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : தென்மேற்கு பருவமழை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் 95 சதவீதம் இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கடந்த மே மாதம் 29-ம் தேதி கேரளாவில் தொடங்கியது. தொடக்கத்தில் சிறிது தொய்வு அடைந்து காணப்பட்ட நிலையில், ஜூன் மாதம் இறுதியில் பருவமழை தீவிரமடைந்தது.

இதனால் கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா, அசாம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், அரியானா, அரியானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பை விட அதிகமான மழை பொழிவு ஏற்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய தமிழக மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது.

இந்நிலையில், ஆகஸ்ட் மற்றும் வரும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதத்தில் அதன் தாக்கம் இயல்பாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, நடப்பாண்டு ஜூனில் துவங்கும் தென் மேற்கு பருவமழை 96 சதவீதம் முதல் 104 சதவீதம்  வரை இருக்கும் என்று தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை குறித்த 2-ம் கட்ட நீண்ட கால முன்னறிவிப்பில், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில், 95 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து