1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு நவம்பர் 11-ல் நடைபெறுகிறது

வெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2018      தமிழகம்
TNPSC(N)

Source: provided

சென்னை : டி.என்.பி.எஸ்.சியால் நடத்தப்படும்  குரூப்-2 தேர்வுகள் வரும் நவம்பர் 11-ல் நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப்  பணியாளர் தேர்வாணையமானது அரசின் பல்வேறு பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.  அந்த வகையில் தமிழக அரசில் ஏறக்குறைய 23 பிரிவுகளில் இருக்க கூடிய 1199 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வுகள் வரும் நவம்பர் 11-ல் நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்த தேர்வுக்கு வரும் செப்டம்பர் 9-ம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சியின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  இவ்வாறு டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து