முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ரமணி பதவியேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தஹில் ரமணி பதவியேற்றார்.

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், ஐகோர்ட் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக அண்மையில் பொறுப்பேற்றார். இதையடுத்து, மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) இருந்து வந்த வி.கே.தஹில் ரமணியை, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமித்து, மத்திய சட்ட அமைச்சகம் அண்மையில் அறிவிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து