முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்ரான்கான் பதவியேற்பு விழா: கபில்தேவ் பங்கேற்க மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : கவாஸ்கரை தொடர்ந்து கபில் தேவும் இம்ரான்கான் பதவியேற்பு விழாவை புறக்கணித்து உள்ளார்.

பிரதமராக...

பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்-இ- இன்ஷாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் அந்த கட்சி ஆட்சி அமைக்கிறது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வருகிற 18-ந்தேதி பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் தனது நெருங்கிய நண்பர்களுமான கபில்தேவ், நவ்ஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதேபோல இந்தி நடிகர் அமீர்கானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

கவாஸ்கர் மறுப்பு

இம்ரான்கானின் அழைப்பை ஏற்று கபில்தேவும், சித்துவும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாக அறிவித்து இருந்தனர். அவர்கள் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பதவியேற்பு விழாவில் பங்கேற்க கவாஸ்கர் மறுத்துவிட்டார். தனக்கு வர்ணனை செய்யும் பணி இருப்பதால் கலந்து கொள்ள இயலாது என்று அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்

இந்த நிலையில் கவாஸ்கரை தொடர்ந்து கபில் தேவும் இம்ரான்கான் பதவி யேற்பு விழாவை புறக்கணித்து உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னால் இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கபில்தேவ் பதவியேற்பு விழாவை புறக்கணித்தாக கூறப்படுகிறது.

சித்து மட்டுமே...

முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் சித்து மட்டுமே இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் விசா கேட்டு விண்ணப்பித்து உள்ளார். பாலிவுட் பிரபலமான அமீர்கான் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்கிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து