முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

தேனி : வைகை அணை 10 ஆண்டுகளுக் குப் பிறகு முழு கொள்ளளவை எட்டுவதால் அணையில் இருந்து வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க முதல்வருக்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள் பரிந்துரைத்தனர். அதன்படி வைகை அணையிலிருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.அதனால் கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை அணைக்குப் பெரியாறு அணையில் இருந்தும், மூல வைகை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்தும் தண்ணீர் வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாகப் பருவ மழை காலங்களில்கூட மூல வைகையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் வரவில்லை. அங்குள்ள மரங்கள் அடர்த்தி குறைந்ததால் மழைப்பொழிவு குறைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கேரளாவில் கடந்த 10 நாட்களாகப் பெய்யும் மழையால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. பெரியாறு அணைக்கு 22,588 கன அடி தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் அனைத்தும் வைகை அணைக்கு திறந்துவிட முடியாது. எனவே அதில் 2,336 கன அடி மட்டும், வைகை அணைக்கு திறந்துவிடப்படுகிறது.

பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் வைகை அணை வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று பிற்பகல் நிலவரப்படி வைகை அணைக்கு 4,872 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. வைகை அணை மொத்த நீர்மட்டம் 71. நேற்று பிற்பகல் நிலவரப்படி அணை நீர்மட்டம் 68 அடியை எட்டியுள்ளது. இதே நீர்வரத்து இருந்தால் வைகை அணை முழு கொள்ளளவை விரைவில் எட்டும் வாய்ப்புள்ளது.

இதனால் மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் வைகை அணையை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவர் காலை 11 மணியளவில் வைகை அணையின் அபாய எச்ச ரிக்கை சங்கு ஒலிக்கச் செய்து கரையோர மக்களுக்கு முதற் கட்ட வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுத்தார். வைகை அணை கடந்த 2011-ம் ஆண்டு நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து