முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருத்தங்கல் காவல் நிலைய புதிய கட்டிடத்திற்கு பூமிபூஜை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      விருதுநகர்
Image Unavailable

சிவகாசி, - ரூ.59.66 லட்சம் மதிப்பீட்டில் திருத்தங்கல் புதிய காவல் நிலையம் கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்து கட்டிடப் பணிகளை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார்
திருத்தங்கல் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக தரைத்தளம் மற்றும் முதல்தளம் என இரண்டு தளங்களை உள்ளடக்கி 249.34 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.59.66 லட்சம் மதிப்பீட்டில் திருத்தங்கல் புதிய காவல் நிலையம் கட்டிடம் கட்டப்படவுள்ளது. இக்காவல் நிலையக் கட்டிடத்தில் 110.41 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளமும், 113.05 சதுர மீட்டர் பரப்பளவில் முதல்தளமும் அமையவுள்ளது. புதிதாக கட்டப்படவுள்ள காவல் நிலையம் கட்டிடத்தின் தரைதளத்தில் வரவேற்பு அறையும் காவல் ஆய்வாளர் அறையும் கணிணி அறையும் நிலைய எழுத்தர் அறையும் கைதி அறையும் மற்றும் ஆயுத வைப்பறையும் முதல்தளத்தில் உதவி ஆய்வாளர் அறையும் ஓய்வு அறையும், பொருள் வைப்பறையும் பதிவேடு அறை மற்றும் விசாரணை அறையும் அமையவுள்ளது.
இந்த புதிய கட்டிடத்திற்கான பூமிபூஜை நடைபெற்றது. அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பூமி பூஜை செய்து கட்டிடப்பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. ராசராசன், டி.எஸ்.பி. பிரபாகரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜா, ஸ்ரீநிவாசன், அ.தி.மு.க. நகர செயலாளர் பொன்சக்திவேல், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சீனிவாசன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ரமணா, கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள், அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து