விஜய் மல்லையா லண்டன் தப்பிச்செல்ல அருண் ஜேட்லி மறைமுகமாக உதவி செய்துள்ளார்: ராகுல்

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018      இந்தியா
rahul-gandhi 2017 9 10

புதுடெல்லி : இந்தியாவில் இருந்து வெளியேறும் முன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை நாடாளுமன்றத்தில் சந்தித்ததாக விஜய் மல்லையா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அருண் ஜேட்லி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்தாலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதுதொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

குறிப்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி இந்த சந்திப்பை உறுதிபடுத்தும் விதமாக ட்வீட் செய்துள்ளார். இதுவும் பாஜக-வுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல், இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்தாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். தன்னுடைய ஒவ்வொரு சந்திப்புகள் குறித்தும் தெரிவித்து வரும் ஜேட்லி, இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காதது ஏன்? மல்லையாவுடன் தான் சில வார்த்தைகள் மட்டுமே பேசியதாக ஜேட்லியின் விளக்கம் முற்றிலும் பொய்யானது.

குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவர் இந்தியாவை விட்டு வெளியேறி லண்டன் செல்லப்போவதாக மத்திய நிதியமைச்சரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அமைச்சரோ இதுகுறித்து சிபிஐ, அமலாக்கத்துறை, போலீஸார் என யாரிடமும் தெரிவிக்கவில்லை. அப்படியென்றால் இவ்விருவருக்கும் இடையே ஏதேனும் ஒப்பந்தம் உள்ளது என்றுதான் அர்த்தம். விஜய் மல்லையா லண்டன் தப்பிச்செல்ல அருண் ஜேட்லி மறைமுகமாக உதவி செய்துள்ளார்.

இதில் என்ன நடந்தது என்னும் உண்மையை தெரிவித்துவிட்டு மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அருண் ஜேட்லி பதவி விலக வேண்டும். அதுபோல மல்லையா மீதான கைது நடவடிக்கையை எதற்காக எச்சரிக்கை நடவடிக்கையாக மாற்ற வேண்டும். இவையெல்லாம் சிபிஐ-ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒருவரால் தான் செய்ய முடியும்.

இந்த அரசானது விஜய் மல்லையா, ரஃபோல் போர் விமான ஒப்பந்தம் என ஊழலில் மிதக்கிறது. மல்லையா இந்தியாவில் இருந்து தப்பிக்க நிதியமைச்சர் தான் வழிகாட்டினார். மல்லையா தன்னிடம் ஒரு மூலையில் தான் சந்தித்துப் பேசினார் என்றால் அவரை ஏன் அப்போதே கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்ல

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து