தி.மு.க. முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்: ஸ்டாலின்

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      தமிழகம்
T R Baalu appointed DMK principal secretary 14-09-2018

சென்னை,தி.மு.க. முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கருணாநிதி மறைவையடுத்து தி.மு.க. செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைவராகவும், முதன்மைச் செயலாளராக இருந்த துரைமுருகன் கட்சியின் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவரும், கடந்த ஆகஸ்டு 28-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனால், துரைமுருகன் வகித்து வந்த முதன்மைச் செயலாளர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில் முதன்மைச் செயலாளர் பொறுப்பு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து